/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதிய பெண் போலீசார் இல்லை; அவதிப்படும் புகார்தாரர்கள்
/
போதிய பெண் போலீசார் இல்லை; அவதிப்படும் புகார்தாரர்கள்
போதிய பெண் போலீசார் இல்லை; அவதிப்படும் புகார்தாரர்கள்
போதிய பெண் போலீசார் இல்லை; அவதிப்படும் புகார்தாரர்கள்
ADDED : டிச 28, 2024 12:15 AM
சூலுார்; சூலுார்மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், போதிய போலீசார் இல்லாததால், புகார் தாரர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சூலுாரில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இங்கு, ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் எட்டு போலீசார் பணியாற்றுகின்றனர். கோவில்பாளையம், செட்டிபாளையம், சுல்தான்பேட்டை, சூலுார், கருமத்தம்பட்டி பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இங்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது. போதிய பெண் போலீசார் இல்லாததால், புகார் கொடுக்க வருவோர் அலைக்கழிக்கப் படுவதாக புகார் எழுந்துள்ளது.
ஒன்பது போலீசாரில், இருவர் மருத்துவ விடுப்பில் உள்ளனர். ஒருவர் கோர்ட் பணிகளுக்கு செல்கிறார். இருவர் விசாரணைக்கு செல்கின்றனர். மீதமுள்ளவர்கள் தான் ஸ்டேஷனுக்கு வரும் புகார் மனுக்களை விசாரிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால், புகார்தாரர்கள் காத்திருந்து அலைச்சலுக்கு உள்ளாக வேண்டிய நிலை உள்ளது. கூடுதல் பெண் போலீசார் இருந்தால் மட்டுமே புகார் மனுக்களுக்கு தீர்வு காணமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதல் போலீசாரை நியமிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

