UPDATED : நவ 04, 2026 10:29 AM
ADDED : நவ 04, 2026 10:26 AM
கோவை: மாநகர பகுதிகளில் உள்ள தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி நடக்கிறது. இதற்காக மண்டல வாரியாக மாநகராட்சி ஒப்பந்தம் வழங்கியுள்ளது. கிழக்கு மண்டலத்தில் உள்ள ஏ.பி.சி. மையத்தை பிராணிமித்ரன் என்கிற தொண்டு நிறுவனம் பராமரிக்கிறது.
இந்த மையம் ஒண்டிப்புதூரில் உள்ளது. நாய்களுக்கு முறையாக அறுவை சிகிச்சை செய்வதில்லை உள்ளிட்ட பல்வேறு புகார் எழுந்தது. கால்நடை மருத்துவருடன் ஆய்வுக்கு சென்ற தன்னார்வலர் விலங்கின ஆர்வலர் பாலகிருஷ்ணன் என்பவரை தாக்கியதாக, சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது ஏராளமான புகார் வருகிறது. அவர்களுடன் ஒப்பந்தத்தை தொடர விருப்பமில்லை. கோர்ட் வழக்கு நிலுவையால் உடனடியாக ஒப்பந்தம் ரத்து செய்ய முடிய வில்லை. இதுகுறித்து விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்றார்.
