ADDED : மார் 17, 2024 12:40 AM
திருப்பூர்;நுால் விலை கிலோவுக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
பருத்தி வரத்து குறைந்துள்ளதாலும், வெளிமார்க்கெட்டில் பஞ்சு விலை அதிகரித்து வருவதாலும், நுால்விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது.
நுாலுக்கான தேவை அதிகரிக்கும் நேரத்தில், பஞ்சு தட்டுப்பாடால் விலை உயர்ந்து வருகிறது.
பஞ்சு விலைக்கு ஏற்ப நுால் விலையும் உயர்த்தப்படுகிறது.
இந்நிலையில், சில நுாற்பாலைகள் மட்டும், கிலோவுக்கு ஐந்து ரூபாய் அளவுக்கு நுால்விலையை உயர்த்தியுள்ளன; 80 சதவீத நுாற்பாலைகள் நுால்விலையை உயர்த்தவில்லை. நுால்விலையை உயர்த்தினாலும், வாடிக்கையாளருக்கு ஏற்ப தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் நுாற்பாலைகள் தெரிவித்துள்ளன.
நேற்றைய நிலவரப்படி, கோம்டு ரகம் (வரி நீங்கலாக), 16 ம் நம்பர் - 265 ரூபாய், 20ம் நம்பர் - 268, 24ம் நம்பர் - 273; 30ம் நம்பர் - 283, 34ம் நம்பர் - 291, 40ம் நம்பர் 309 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'செமி கோம்டு' ரகம் :16ம் நம்பர் - 255 ரூபாய், 20ம் நம்பர் - 258, 24 ம் நம்பர் - 263, 30ம் நம்பர் 273; 34 ம் நம்பர் - 281, 34 ம் நம்பர் - 299 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

