/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
/
பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
ADDED : நவ 19, 2024 08:02 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அங்கன்வாடி மையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில், எடை குறைவாக உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி கடந்த வாரம் துவங்கப்பட்டது. கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் 'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டத்தின் இரண்டாம் கட்டம் துவக்க விழா நடந்தது.
நிகழ்ச்சியில், பிறந்த குழந்தைகள் முதல் ஆறு மாத குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்கள் பங்கேற்றனர். இதில், அதிகமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள, 25 குழந்தைகளின் தாய்மார்களுக்கு இரண்டு ஊட்டச்சத்து பெட்டகமும், மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள, 47 குழந்தைகளின் தாய்மார்களுக்கு, ஒரு பெட்டகமும் வழங்கப்பட்டது.
இதில், மாவட்ட கவுன்சிலர் ராஜன் பங்கேற்று தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சகுந்தலா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தாய்மார்கள் பங்கேற்றனர்.
குழந்தைகள் திட்ட அலுவலர் கூறுகையில், 'பாலூட்டும் தாய்மார்களிடம், குழந்தைகள் ஊட்டச்சத்து மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள பெட்டகத்தில் உள்ள பொருட்களை பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது,' என்றனர்.