/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில் பயணியிடம் கைவரிசை ஒடிசா மாநில வாலிபர் கைது
/
ரயில் பயணியிடம் கைவரிசை ஒடிசா மாநில வாலிபர் கைது
ADDED : ஜன 24, 2025 01:45 AM

கோவை:ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய ஒடிசா மாநில வாலிபரை கோவை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்தவர் சத்யபாமா, 76. இவர் கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள தன் மகளை பார்ப்பதற்காக சென்னை - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் 11 பெட்டியில் பயணம் செய்தார். அவர் தன் ஹேண்ட் பேக்கை இருக்கையில் வைத்து படுத்திருந்தார்.
ரயில் திருப்பூர் அருகில் வந்தபோது, ஹேண்ட் பேக்கை காணாமல் திடுக்கிட்டார். அதில் தங்க மோதிரம், 12,000 ரூபாய் மற்றும் மொபைல் போன் இருந்தது.
இந்த துணிகர திருட்டு குறித்து, கோவை ரயில்வே போலீசார் விசாரித்து வந்தனர். கோவை ரயில் நிலையத்தில் சுற்றி வந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தபலேஸ்வர், 19, என்பது தெரிந்தது.
அவரிடம் போலீசார் சோதனை நடத்தியதில், சத்யபாமாவின் ஹேண்ட் பேக் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்து, ஹேண்ட்பேக்கை பறிமுதல் செய்த போலீசார், தபலேஸ்வரை சிறையில் அடைத்தனர்.