/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாகனங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை ;ரூ.6.22 லட்சம் பறிமுதல்
/
வாகனங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை ;ரூ.6.22 லட்சம் பறிமுதல்
வாகனங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை ;ரூ.6.22 லட்சம் பறிமுதல்
வாகனங்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை ;ரூ.6.22 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 17, 2024 11:40 PM

அன்னுார்:தேர்தலை முன்னிட்டு, அன்னுாரில், அதிகாரிகள், வாகனங்களில் சோதனை நடத்தினர்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில், எட்டு மணி நேரத்திற்கு, ஒரு குழு வீதம், மூன்று பறக்கும் படை குழுக்கள், மூன்று நிலை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் இரண்டு வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் இரவு முதல், பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் கண்காணிப்பை துவக்கின. நேற்று மதியம் அவிநாசி தொகுதிக்குட்பட்ட, அன்னுார் வட்டாரத்தில் பசூர், பொகலூர் மற்றும் அன்னுாரில் நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் ரமேஷ் தலைமையில், போலீஸ் எஸ்.ஐ., கலாமணி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சோதனை செய்யப்படுவது குறித்து முழுமையாக வீடியோவில் பதிவு செய்து வருகின்றனர்.
ஆவணங்கள் இல்லாமல், பணம் கொண்டு செல்லப்படுகிறதா என 50க்கும் மேற்பட்ட கார் மற்றும் வேன்களில் பரிசோதனை நடத்தினர். சட்டவிரோதமாக பணம் கொண்டு செல்லப்படுவது அல்லது வழங்கப்படுவது குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.6.22 லட்சம் பணம் பறிமுதல்
மேட்டுப்பாளையத்தில் வட்ட அளவில் 3 பறக்கும் படைகள், 3 நிலை கண்காணிப்புக்குழுவினர் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் நேற்று முன் தினம் அன்னுார் சாலையில் பொகளூரை சேர்ந்த பழனிச்சாமி, 47, என்பவரிடமிருந்து ரூ.53 ஆயிரம், ஓடந்துறை சாலையில் கோத்தகிரியை சேர்ந்த மோகன், 49, என்பவரிடமிருந்து ரூ.1,19,800, ஊட்டி சாலையில் தென்காசியை சேர்ந்த சங்கரலிங்கம், 50, என்பவரிடம் இருந்து ரூ.4 லட்சம், கோத்தகிரி சாலையில் திருப்பூரை சேர்ந்த மகிழ் என்பவரிடமிருந்து ரூ. 50,000 என மொத்தமாக ரூ. 6,22,800 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.-

