/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலாவதி தேதியின்றி தின்பண்டம் விற்பனை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
/
காலாவதி தேதியின்றி தின்பண்டம் விற்பனை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
காலாவதி தேதியின்றி தின்பண்டம் விற்பனை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
காலாவதி தேதியின்றி தின்பண்டம் விற்பனை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
ADDED : டிச 26, 2024 10:31 PM
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சியில், சில டீக்கடைகள் மற்றும் பேக்கரிகளில், காலாவதி தேதி குறிப்பிடாத தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், நாளுக்குநாள் உணவு தயாரிப்பு நிறுவனங்கள் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே உணவு பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி உணவு மற்றும் தின்பண்டம் தயாரிப்பில் ஈடுபடுகின்றன.
அவ்வாறு, விற்பனை செய்யப்படும் பாக்கெட்டில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியும் குறிப்பிடப்படுகிறது. ஆனால், சிலரோ, தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் மிக்சர், முறுக்கு, சிப்ஸ் உள்ளிட்டவைகளை குறைந்த விலையில் மொத்தமாக வாங்கி, அதனை பொட்டலமிட்டு, டீக்கடைகள், பேக்கரில் விற்பனை செய்கின்றனர். அப்போது, அதன் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை குறிப்பிடுவதும் கிடையாது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், உணவு தயாரிக்க விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, தரமான, சுத்தமான, பாதுகாப்பான மூலப்பொருட்களைக் கொண்டே தின்பண்டங்கள் தயாரிக்க வேண்டும்.
அளவுக்கு அதிகமான வண்ணங்கள் சேர்க்கக் கூடாது. அயோடின் கலந்த உப்பு, பாக்கெட் வாசனைப் பொருட்கள் மற்றும் உணவு எண்ணெய் வகைகளை பயன்படுத்தவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், சில கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்களில், உணவுப் பெயர், தயாரிப்பாளர் பெயர் மற்றும் முழு முகவரி, நிகர தரம், அளவு ஆகியவை இடம்பெறவே இல்லை. மேலும், லாட், கோடு பேட்ச், பேட்ச் எண், 'டிசென்டிங்' முறையில் மூலப்பொருட்கள் பட்டியல், ஊட்டச்சத்து தகவல்கள், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, பயன்படுத்தும் காலம், ஐ.என்.எஸ்., எண், சைவம் அல்லது அசைவ குறியீடு போன்றவையும் காணப்படுவதில்லை. இதனை உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

