/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கசிவு சரி செய்யாமல் வீணாகும் குடிநீர்: அதிகாரிகள் கவனம் செலுத்தணும்
/
கசிவு சரி செய்யாமல் வீணாகும் குடிநீர்: அதிகாரிகள் கவனம் செலுத்தணும்
கசிவு சரி செய்யாமல் வீணாகும் குடிநீர்: அதிகாரிகள் கவனம் செலுத்தணும்
கசிவு சரி செய்யாமல் வீணாகும் குடிநீர்: அதிகாரிகள் கவனம் செலுத்தணும்
ADDED : பிப் 19, 2024 12:08 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில், நீர் கசிவு சீரமைக்கப்படாமல் உள்ளதால் குடிநீர் விரயமாகிறது. இது குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் ரோடு வழியாக ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வோர், அதிகளவு இந்த ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர்.
பல மாதங்களாக சேதமடைந்த ரோடு, கடந்த சில வாரங்களுக்கு முன் அவசர கதியில் போடப்பட்டது. இந்நிலையில், அங்குள்ள நீர் கசிவை சீரமைப்பதற்கு முன்பே, ரோடு போடப்பட்டது. இதனால், நீர் கசிவால் அந்த ரோடு மீண்டும் சேதமடையும் சூழல் உள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது:
ரோட்டை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்த நிலையில் அவசரம், அவசரமாக ரோடு போடப்பட்டுள்ளது. அங்குள்ள நீர் கசிவை சரி செய்யாமலேயே, மேம்போக்காக ரோடு போடப்பட்டது.
தற்போது அதிகளவு கசிவு ஏற்பட்டு நீர் விரயமாகி வருவதால், ரோடு சேதமடையும் வாய்ப்புள்ளது. ரோடு போடுவதற்கு முன்பே, இதை சீரமைக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை.
தற்போது பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள சூழலில், இதுபோன்று நீர் விரயமாகுவதை தடுக்க அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
ஆலோசித்து இருக்கலாம்!
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டை புதியதாக போடுவதற்கு முன்பே, அங்குள்ள நீர் கசிவை சரி செய்வதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இருக்கலாம்.
மேலும், ஆள் இறங்கும் குழிகளை மூடி ரோடு போடப்பட்டுள்ளன. இதனால், குழிகள் உள்ள பகுதி மீண்டும் தோண்டப்படும் போது, ரோடு சேதமடைய வாய்ப்புள்ளது.
எனவே, அதிகாரிகள் ரோடு போடுவதற்கு முன்பே சீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசித்து இருக்கலாம். அவசர கதியில் ரோடு போட்டும் தற்போது மீண்டும் ரோடு தோண்டும் போது நிதி வீணாகும் சூழல் உள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.

