/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனப்பகுதியில் இறந்து கிடந்த முதியவர்
/
வனப்பகுதியில் இறந்து கிடந்த முதியவர்
ADDED : ஆக 12, 2025 08:07 PM
மேட்டுப்பாளையம்; கோபனாரி வனப்பகுதியில் இறந்து கிடந்த முதியவர் உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காடு பூமாதேவி பகுதியை சேர்ந்தவர் முருகன், 70. இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்நிலையில் இவர் தனது மகன் சந்திரன் வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் வீட்டை விட்டு வெளியே சென்ற முருகன், மீண்டும் வீடு திரும்பவில்லை. சந்திரன் பல இடங்களில் தேடியும் முருகன் கிடைக்கவில்லை.
கோபனாரி வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, கூடப்பட்டி பிரிவில் மனித எலும்புக்கூடுகள் கிடந்ததைப் பார்த்து, பில்லூர் அணை போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தனர். போலீசார் சந்திரனை உடன் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது, இதில் இறந்த கிடப்பது தனது தந்தை தான் என உறுதி செய்தார்.
பின் சடலத்தை மீட்டு போலீசார் பிரதே பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.-----