/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மந்திரங்களில் உன்னதமானது ஓம்'
/
'மந்திரங்களில் உன்னதமானது ஓம்'
ADDED : ஜன 29, 2024 12:40 AM

கோவை;''மந்திரங்களில் உன்னதமானது எது என்றால் அது ஓம் தான்,'' என, ஆன்மிக சொற்பொழிவாளர் ஸ்ரீகிருஷ்ணா பேசினார்.
கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'ஞான வேள்வி' என்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் நேற்று மாலை நடந்தது.
'ஓங்காரப்பொருள்' அக் ஷரமண மாலை என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவாளர் ஸ்ரீகிருஷ்ணா பேசியதாவது:
பகவான் ரமணர், அக் ஷரமண மாலையின் மூலம் நமக்கு ஒலியையும், ஒளியையும் காட்டுகிறார். ஞானிகள் இந்த உலகத்தை நேரடியாக காட்ட மாட்டார்கள். இந்த உலகத்தை தாண்டி, வேறொரு அரிய விஷயத்தை நமக்கு காட்டுவர்.
மந்திரங்களில் உன்னதமானது எது என்றால் அது ஓம் தான். ஓம் என்று சொன்னால், இந்த பிரபஞ்சம் நமக்குள் தோன்றும். ஓம் என்பதற்குள் ஆக்கல், ஒடுங்குதல், அழில் இவை மூன்றும் உண்டு.
இவ்வாறு, அவர் பேசினார்.