UPDATED : நவ 06, 2026 07:05 PM
ADDED : நவ 05, 2026 04:02 PM

அ நிறம் | அளவு
கோவை: ஒண்டிப்புதூர் வார்டு 57, நெசவாளர் காலனியில் மாநகராட்சி குப்பையில் உரம் தயாரிக்கும் மையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் உள்ளது.
தினமும் மாநகராட்சி சார்பில் அதிகளவு குப்பை கொட்டப்படுகிறது. மழை காலத்தில் அதிலிருந்து கூடுதல் துர்நாற்றம் பரவுகிறது. கழிவுநீரும் தேங்குகிறது. குப்பை மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
அவர்கள் மேலும் கூறுகையில், குப்பை மையத்தால் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. வாழ தகுதியற்ற பகுதியாக மாறி வருகிறது. இருக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், மேற்கொண்டு குப்பை கொட்டுவதை தடை செய்ய வேண்டும் என்றனர்.
