/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
5 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது
/
5 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் கைது
ADDED : மார் 20, 2025 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் : சூலுார் அருகே கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சூலுார் போலீசார் சூலுார் பிரிவு ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். குரும்பபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில், கையில் பையுடன் சென்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
பையை சோதனையிட்டபோது, அதில், ஐந்து கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில், அந்நபர் திருப்பூர் மாவட்டம் வளையங்காட்டை சேர்ந்த அழகர்சாமி, 56 என்பதும், கஞ்சா விற்று வருவதும் தெரிந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அழகர்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.