UPDATED : அக் 23, 2026 07:44 PM
ADDED : அக் 23, 2026 07:38 PM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: சரவணம்பட்டியில் விவசாயிகளுக்காக ஆடு வளர்ப்பு ஒரு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது.
இம்மாதம், 30ம் தேதி வெள்ளிக்கிழமை ஆடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் காளப்பட்டி பிரிவு, சரவணம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள விவசாயிகள் மையத்தை நேரில் அல்லது, 0422 2669965 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, தங்களது பெயர்களை பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி நேரம் காலை, 10:30 மணி முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கிறது.
