/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆக்கிரமிப்பு அகற்றும் போது சிலாப் உடைந்து ஒருவர் காயம்
/
ஆக்கிரமிப்பு அகற்றும் போது சிலாப் உடைந்து ஒருவர் காயம்
ஆக்கிரமிப்பு அகற்றும் போது சிலாப் உடைந்து ஒருவர் காயம்
ஆக்கிரமிப்பு அகற்றும் போது சிலாப் உடைந்து ஒருவர் காயம்
ADDED : பிப் 05, 2025 11:33 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஜூப்ளி கிணறு வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் போது, சிலாப் உடைந்து விழுந்து, நகராட்சி பணியாளர் காயமடைந்தார்.
பொள்ளாச்சி ஜூப்ளி கிணறு வீதியில், கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், சாக்கடை கால்வாய் மீது இருந்த கறிக்கடை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அந்த கடை அகற்றப்பட்ட பின், சிலாப் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சிலாப் உடைந்து பணியாளர் திருமூர்த்தி,48, என்பவரின் கால் சிக்கிக்கொண்டது.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் வாயிலாக அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பணியாளர்கள், பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும். இதை அதிகாரிகள் கண்காணித்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.