ADDED : ஜூலை 09, 2025 10:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று ஏல விற்பனை நடந்தது. இதில் 9,542 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. குறைந்தபட்சம் ஒரு கிலோ 61 ரூபாய் 35 காசு முதல், அதிகபட்சம், ஒரு கிலோ 70 ரூபாய் 20 காசு வரை விற்பனையானது.
தேங்காய் கொப்பரை 36 மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. இதன் மதிப்பு 2 லட்சத்து 4 ஆயிரத்து 738 ரூபாய். குறைந்தபட்சம் ஒரு கிலோ 190க்கும், அதிகபட்சமாக ஒரு கிலோ 253 ரூபாய்க்கும் விற்பனையானது. 62 விவசாயிகள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இத்தகவலை விற்பனை கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.