/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரே ஒரு சுங்கச்சாவடி! ஆக.,1 முதல் அமல்
/
ஒரே ஒரு சுங்கச்சாவடி! ஆக.,1 முதல் அமல்
ADDED : ஜூலை 27, 2025 12:27 AM
கோவை : கோவை எல் அன் டி பைபாஸ் சாலையில் வரும் ஆக.,1 முதல் ஒரே ஒரு சுங்கச்சாவடியில் மட்டுமே சுங்ககட்டணம் வசூலிக்கப்படும்; உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அறிக்கை:
நீலம்பூரிலிருந்து மதுக்கரை வரை 28 கி.மீ., கொண்ட எல்.அன் டி பைபாஸ் சாலையில், 1999 முதல் எல் அன் டி நிறுவனத்துக்கு, 30 ஆண்டுகள் சுங்க வசூல் செய்ய உரிமம் வழங்கப்பட்டிருந்தது.
பல்வேறு காரணங்களால், 2025 ஏப்.,1 முதல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசம் சென்றது. கடந்த ஜூனிலிருந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக சுங்க கட்டணம் வசூலித்து வருகிறது.
இச்சூழலில் எல் அன் டிபைபாஸ் சாலையில் உள்ள ஆறு சுங்கசாவடிகளில் ஐந்தை மூடிவிட்டு மதுக்கரையிலுள்ள ஒரே ஒரு சுங்க சாவடியில் மட்டும், ஆக., 1 முதல் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள் ளது. கோவை மாவட்ட பதிவெண் கொண்ட தனியார் மற்றும் வணிக வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மிகப் பாதுகாப்பான சாலையாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.