/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறந்தவெளி கிணறுகள்; வனத்துறையினர் நோட்டீஸ்
/
திறந்தவெளி கிணறுகள்; வனத்துறையினர் நோட்டீஸ்
ADDED : ஆக 25, 2025 09:39 PM
பெ.நா.பாளையம்; வன எல்லையையொட்டி உள்ள திறந்தவெளி கிணறுகளை சுற்றிலும் தடுப்பு சுவர் அமைக்க, நில உரிமையாளர்களுக்கு வனத்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.
வனப்பகுதிகளையொட்டியுள்ள கிராமங்களில் திறந்த வெளி மற்றும் பயன்படாத கிணறுகளை வனத்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.
கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட ஏழு வனச்சரகங்களிலும், இப்பணியை அந்தந்த பகுதி வனச்சரக அலுவலகம் வாயிலாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றனர்.
சாடிவயல், போளுவாம்பட்டி அருகே கடந்த ஜூலை, 31ம் தேதி, 30 அடி ஆழ கிணற்றில் ஆண் யானை விழுந்து உயிரிழந்தது.
இதையடுத்து வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் திறந்த வெளி மற்றும் பயன்படுத்தாத கிணறுகள் குறித்து வனத்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக வனத்துறையினர், திறந்தவெளி கிணறுகள் உள்ள நில உரிமையாளர்களுக்கு தடுப்பு சுவர் அமைக்க நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,' விவசாய நிலங்களில் ஊடுருவும் காட்டு யானைகள் திறந்தவெளி கிணறுகளில் தவறி விழாமல் இருக்க கிணற்றைச் சுற்றி தடுப்புச் சுவர் அமைக்க நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஊராட்சிக்கு சொந்தமான கிணறுகளை சுற்றிலும் தடுப்புச் சுவர் அமைத்து பாதுகாக்கவும் அந்தந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.