/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒத்தக்கால்மண்டபம் பள்ளியில் புதிய வகுப்பறை திறப்பு விழா
/
ஒத்தக்கால்மண்டபம் பள்ளியில் புதிய வகுப்பறை திறப்பு விழா
ஒத்தக்கால்மண்டபம் பள்ளியில் புதிய வகுப்பறை திறப்பு விழா
ஒத்தக்கால்மண்டபம் பள்ளியில் புதிய வகுப்பறை திறப்பு விழா
ADDED : ஜூன் 10, 2025 09:56 PM
கோவை; ஒத்தக்கால் மண்டபம் அரசு உயர்நிலைப்பள்ளியில், கோவை மெட்ரோபாலிட்டன் ரவுண்ட் டேபிள் 62 மற்றும் லேடீஸ் சர்க்கிள் 23, ஐ பவுண்டேஷன் ஆகிய அமைப்புகளின் சார்பில், இரண்டு புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
பள்ளி தலைமையாசிரியர் அமுதா, பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி, ஐ பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஸ்ரேயாஸ் ராமமூர்த்தி, கட்டடங்களை திறந்து வைத்தார். மெட்ரோபாலிட்டன் ரவுண்ட் டேபிள் 62 மற்றும் லேடீஸ் சர்க்கிள் 23 சார்பில் ரகுலன் சேகர், ஐஸ்வர்யா குப்தா, நவீன் பிரசன்னா, நிஷா கிங்கர், அபிஷேக் டிபர்வால், ஆயுஷி டிபர்வால், வீரா அனீஷ், யாஷ் கெம்கா, ஸ்வேதா கோவிந்த், மீனாட்சி ஆனந்த், ஸ்வேதா மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.