/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு
/
நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு
ADDED : ஆக 07, 2025 07:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே, திப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது. பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.
தலைமையாசிரியர் ஜெயலட்சுமி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் வெள்ளியங்கிரி பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் திட்டங்களை பயன்படுத்தி, உயர்ந்த நிலையை அடைய வேண்டும். மொபைல்போன் பயன்பாட்டை தவிர்த்து, கல்வி கற்பதில் கவனம் செலுத்த வேண்டும், என, மாணவர்களை அறிவுறுத்தினர்.