/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பள்ளியில் புதிய நுாலகம் திறப்பு
/
மாநகராட்சி பள்ளியில் புதிய நுாலகம் திறப்பு
ADDED : பிப் 23, 2024 12:39 AM
கோவை;ராமலிங்கம் காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகம், நுாலகம் நேற்று திறந்துவைக்கப்பட்டது.
மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட ராமலிங்கம் காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சமூக பொறுப்பு நிதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வகம், நுாலகம், கம்ப்யூட்டர் ஆய்வகம், சத்துணவு கூடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மாணவர்கள் பயன்பாட்டுக்கு இவற்றை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, ஆர்.எஸ்.புரத்தில், ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாதிரி பள்ளிக்கான பிரத்யேக தங்கும் விடுதி, பி.என்.புதுாரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார மையம் ஆகிய கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அவர், விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர, அலுவலர்களை அறிவுறுத்தினார்.