ADDED : ஜன 02, 2025 10:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; மேட்டுப்பாளையம் ரோடு, பெட்டதாபுரம் அருகே உள்ள கே.ஆர். பப்ளிக் பள்ளியில் பாரதிராஜா விளையாட்டு அரங்கத்தில் கூடைப்பந்து, ஸ்கேட்டிங், கிரிக்கெட் மைதானங்கள் திறப்பு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக அசாம் மாநில சி.ஆர்.பி.எப்., கமாண்டர் குமார் பங்கேற்று விளையாட்டு, மைதானங்களை திறந்து வைத்தார். பள்ளி முதல்வர் நந்தினி முன்னிலை வகித்தார். விழாவை ஒட்டி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பெற்றோர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டன. நிர்வாக அலுவலர் முரளிதரன் நன்றி கூறினார்.

