/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 நாள் திட்ட வரவு - செலவு தெரிந்து கொள்ள வாய்ப்பு
/
100 நாள் திட்ட வரவு - செலவு தெரிந்து கொள்ள வாய்ப்பு
100 நாள் திட்ட வரவு - செலவு தெரிந்து கொள்ள வாய்ப்பு
100 நாள் திட்ட வரவு - செலவு தெரிந்து கொள்ள வாய்ப்பு
ADDED : ஜூலை 01, 2025 10:32 PM
கோவில்பாளையம்; வெள்ளானைப்பட்டியில், வரும் 4ம் தேதி, சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில், 100 நாள் திட்ட தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.
சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், வெள்ளானைப்பட்டி ஊராட்சியில், 2024 ஏப்., 1 முதல், 2025 மார்ச் 31 வரை, 100 நாள் வேலை திட்டத்தில் செய்யப்பட்ட பணிகளை சமூக தணிக்கை செய்ய, வட்டார வள பயிற்றுனர் ரவிச்சந்திரன் தலைமையில் தணிக்கையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தணிக்கையாளர்கள் நேற்று கைக்கோள பாளையம், செரயாம்பாளையம், வெள்ளானைப்பட்டி ஆகிய கிராமங்களில், 100 நாள் திட்ட தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களது வேலை அட்டையை பரிசோதித்தனர்.கடந்தாண்டு செய்யப்பட்ட பணிகளை இன்று அளவீடு செய்ய உள்ளனர்.
நாளை தணிக்கை அறிக்கை தயாரிக்கப்படுகிறது. வரும் 4ம் தேதி காலை 11:00 மணிக்கு வெள்ளானைப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில், கடந்த ஆண்டு 100 நாள் திட்டத்தில் செய்யப்பட்ட பணிகள், செலவிடப்பட்ட தொகை, உருவாக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் கண்டறியப்பட்ட ஆட்சேபனைகள் அறிக்கையாக வாசிக்கப்படுகிறது.
கூட்டத்தில் பங்கேற்க, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.