/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சியாக உயர்த்த எதிர்ப்பு
/
மாநகராட்சியாக உயர்த்த எதிர்ப்பு
ADDED : ஜன 20, 2025 07:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடவள்ளி : கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில், சோமையம்பாளையம் ஊராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதை கண்டித்து, கையெழுத்து இயக்கம் நடந்தது.
பெரியநாயக்கன்பாளை யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சி, மாநகராட்சி விரிவாக்கத்தில், மாநகராட்சி பகுதியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதனை கண்டித்து, பொதுமக்கள் சார்பில், கையெழுத்து இயக்கம், கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் நேற்று நடந்தது. இன்று நடக்கும் மக்கள் குறை தீர்ப்பு முகாமில், கலெக்டரிடம் மனு அளிக்க முடிவெடுத்துள்ளனர்.