/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர்வழிப்பாதையை மறித்து குப்பைக்கிடங்கு; எட்டிமடை பேரூராட்சி முயற்சிக்கு எதிர்ப்பு

ADDED : டிச 04, 2024 10:24 PM
கோவை; நீர்வழிப்பாதையை மறித்து குப்பைக்கிடங்கு அமைக்க, எட்டிமடை பேரூராட்சி நிர்வாகம் முயற்சிப்பதற்கு விவசாயிகள் தங்கள் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.
மதுக்கரை தாலுகாவுக்குட்பட்ட எட்டிமடை பேரூராட்சியில், க.ச.எண் 162/2ஏ-ல் அரசு புறம்போக்கு நிலத்தின் வழியாக செல்லும் நிலவியல் ஓடை உள்ளது. இந்த ஓடை, மதுக்கரை கிராமத்தில் உள்ள நிலங்களின் வழியாகவும், தனியார் பட்டா நிலத்தின் வழியாகவும் செல்கிறது.
நிலவியல் ஓடையின் இரு கரைகளும், மேட்டு நிலமாக இருந்து வருகிறது. மேற்படி ஓடையில் மழைகாலங்களில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, எட்டிமடை கிராமத்தில் சேனாதிபதி பள்ளத்தை சென்றடைகிறது.
இந்நிலையில், அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள நீர்நிலை ஓடையை மறித்து, குப்பை கிடங்கு அமைக்க எட்டிமடை பேரூராட்சி நிர்வாகம் டெண்டர் கோரி உள்ளது.
அப்படி ஓடை மறிக்கப்பட்டால் ஓடையின் கிழக்கு பகுதியிலுள்ள மேல் பகுதி விவசாய நிலங்கள் மற்றும் வழித்தடங்கள் முற்றிலும் சேதமடையும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்படையும் என, திருமலையம்பாளையம் கிராம விவசாயிகள், எட்டிமடை பேரூராட்சி தலைவரிடம் முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.இதனால் விவசாயிகள் மத்தியில், கடும் அதிருப்தி நிலவுகிறது.