/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன்கடையில் கைரேகை பதிவு செய்ய உத்தரவு
/
ரேஷன்கடையில் கைரேகை பதிவு செய்ய உத்தரவு
ADDED : பிப் 08, 2024 09:11 PM
பொள்ளாச்சி : ரேஷன் கார்டில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள், அனைவரது கைரேகையையும் ரேஷன் கடையில் பதிவு செய்ய வேண்டும் என, ரேஷன்கடை ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில், 11.5 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. அரிசி கார்டுதாரர்களுக்கு மத்திய அரசு சார்பில், இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது.
மானிய விலையில் பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. கார்டுதாரர்கள் பி.ஒ.எஸ்., கருவியில் கைரேகையை பதிவு செய்து, பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில், AAY, PHH ரேஷன் கார்டுகளில் உள்ள உறுப்பினர்கள் அனைவரது கைரேகையையும், 15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என, ரேஷன் கடை ஊழியர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் கூறுகையில், ''இப்போது ரேஷன் கடைகளில் அனைத்து மாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த கார்டுதாரர்களும், பொருட்கள் வாங்குகின்றனர். குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் என்ற, முழுமையான விபரங்கள் தெரியவில்லை. இறந்தவர்களின் பெயர்கள், குடும்ப கார்டில் நீக்கப்படாமல் உள்ளன. இதை முறைப்படுத்தவே, குடும்ப உறுப்பினர்களின் கைரேகை, பதிவு செய்யப்படுகிறது,'' என்றார்.

