/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தவணைக்கு கூடுதல் வட்டி பிடித்தம் வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு
/
தவணைக்கு கூடுதல் வட்டி பிடித்தம் வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு
தவணைக்கு கூடுதல் வட்டி பிடித்தம் வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு
தவணைக்கு கூடுதல் வட்டி பிடித்தம் வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : ஜன 30, 2024 12:20 AM
கோவை:தவணை தொகைக்கு கூடுதல் வட்டி பிடித்தம் செய்ததால், வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க, வங்கி நிர்வாகத்துக்கு, நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, அழகப்பா லே அவுட்டை சேர்ந்த செல்வி, காந்திபுரம், ராம்நகரிலுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில், கார் வாங்குவதற்கு, 2021, டிசம்பரில் ஏழு லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.
மாத தவணை 19,424 ரூபாய் வீதம் திரும்ப செலுத்த வேண்டும். தவணை தொகையினை, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில், அவரது காட்டன் கம்பெனி பெயரிலுள்ள வங்கி கணக்கு வாயிலாக, எடுத்துக்கொள்ளவிண்ணப்பம் கொடுத்தார்.
செல்வியின் வங்கி கணக்கில் பணம் இருப்பு இருந்தும், தவணை நாளான பிப்., 15ல், பணம் வரவு வைக்கப்படவில்லை. வங்கி நிர்வாகம் கவனக்குறைவாக இருந்து விட்டு, 24ம் தேதி பணத்தை எடுத்தது.
ஆனால், கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறி, கூடுதலாக, 117 ரூபாய் வட்டி எடுத்து கொண்டனர். கூடுதல் வட்டி பிடித்தது குறித்து விளக்கம் கேட்டும் பதில் அளிக்கவில்லை. இதனால், செல்வியின் 'சிபில்' ஸ்கோர் குறைந்தது.
பாதிக்கப்பட்ட செல்வி, இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், வங்கி நிர்வாகம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரரிடம் வசூலித்த கூடுதல் வட்டி 117 ரூபாயை திருப்பி கொடுப்பதுடன், அது சம்பந்தமான 'சிபில்' குறியீடு பதிவை ஆரம்ப நிலையிலேயே நீக்க வேண்டும். மனுதாரருக்கு இழப்பீடாக, 25,000 ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு, உத்தரவில் தெரிவித்துள்ளார்.