/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
/
பள்ளி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
ADDED : பிப் 28, 2024 01:12 AM
கோவை;கே.வி.கே. நகர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் கட்டுமான பணிகளை, விரைந்து முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி தெற்கு மண்டலம், 96வது வார்டுக்கு உட்பட்ட சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட் பகுதியில் மூலதன மானிய நிதி திட்டத்தில் ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கழிப்பிடம் கட்டும் பணியும், 97வது வார்டு கே.வி.கே. நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் கல்வி நிதியின் கீழ் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக மூன்று வகுப்பறைகள் கட்டும் பணிகளும் நடந்துவருகின்றன.
பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, மாணவர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

