/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் வினாடி - வினா போட்டிகள் நடத்த உத்தரவு
/
பள்ளிகளில் வினாடி - வினா போட்டிகள் நடத்த உத்தரவு
ADDED : ஜூலை 21, 2025 10:45 PM
கோவை; அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, பள்ளியளவிலான இலக்கிய மன்றப் போட்டிகள் மற்றும் வினாடி - வினா மன்றப் போட்டிகளை நடத்த, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இப்போட்டிகளை, வரும் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளாக வினாடி - வினா போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி, பிரிவு 1-,6 மற்றும் 7ம் வகுப்பு, பிரிவு 2,- 8ம் வகுப்பு, பிரிவு 3-,9ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி-வினா மன்றப் போட்டிகள் மூன்று சுற்றுகளாக நடைபெற உள்ளன.
முதல் சுற்றில், சமத்து வம் , அமைதி மற்றும் நம்பிக்கை உள்ளிட்ட மையக்கருத்துகளில் கேள்விகள், இரண்டாம் சுற்றில், திருக் குறள், அறிவி யல், கணிதம், ஆங்கில இலக்கணம் தொடர்பான கேள்விகள், மூன்றா ம் சுற் றில் தேன் சிட்டு இதழ், பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் சார்ந்த கேள்விகள் இடம் பெறும். ஒவ்வொரு சுற்றிலும் தலா 10 கேள்விகள் இடம்பெறும். இதேபோல், இயக்கிய மன்ற போட்டிகளையும், குறிப்பிட்ட தேதிக்குள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.