/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய மின் விசிறி பழுதானதால் ரூ.74,299 இழப்பீடு தர உத்தரவு
/
புதிய மின் விசிறி பழுதானதால் ரூ.74,299 இழப்பீடு தர உத்தரவு
புதிய மின் விசிறி பழுதானதால் ரூ.74,299 இழப்பீடு தர உத்தரவு
புதிய மின் விசிறி பழுதானதால் ரூ.74,299 இழப்பீடு தர உத்தரவு
ADDED : செப் 03, 2025 11:23 PM
கோவை; போத்தனுார், செட்டிபாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன். மும்பையை சேர்ந்த 'ஆட்டோம்பர்க் டெக்னாலஜிஸ்' நிறுவனத்தின் மின்விசிறியை, காட்டூரில் உள்ள ஒரு கடையில், கடந்தாண்டு, செப்டம்பரில், 4,299 ரூபாய்க்கு வாங்கினார். மின்விசிறியை வீட்டில் பொருத்தியும் இயங்கவில்லை. மின்விசிறி பழுதாகி இருப்பது தெரிந்தது.
மின்விசிறி வாங்கிய கடையில் கேட்டபோது, முறையாக பதிலளிக்கவில்லை. பழுதான மின்விசிறிக்கு பதிலாக புதியது தரப்படவில்லை. இழப்பீடு வழங்கக்கோரி, கோவை கூடுதல் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி, உறுப்பினர் சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், 'மின்விசிறிக்கான தொகை, 4,299 ரூபாயை திருப்பி வழங்குவதுடன், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 50,000 ரூபாய், வழக்கு செலவு, 20,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.