/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
1,200 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள 897 ஓட்டுச்சாவடிகளை பிரிக்க உத்தரவு
/
1,200 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள 897 ஓட்டுச்சாவடிகளை பிரிக்க உத்தரவு
1,200 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள 897 ஓட்டுச்சாவடிகளை பிரிக்க உத்தரவு
1,200 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள 897 ஓட்டுச்சாவடிகளை பிரிக்க உத்தரவு
ADDED : ஜூன் 11, 2025 09:45 PM
கோவை; கோவை மாவட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரிப்பது தொடர்பாக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுடன், தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஆலோசித்தனர்.
இதுதொடர்பாக, தேர்தல் பிரிவினர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில், 3,117 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1,200 வாக்காளர்களுக்கு அதிகமாக, 897 ஓட்டுச்சாவடிகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியில் இருந்தும் தலா, 200 வாக்காளர்களை பிரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
ஒரு ஓட்டுச்சாவடி மையத்துக்குள், இரண்டு அல்லது மூன்று, சில இடங்களில் நான்கு ஓட்டுச்சாவடிகள் அமைந்திருக்கும். அவற்றில் சில ஓட்டுச்சாவடிகளில் குறைவான வாக்காளர்கள் இருப்பர்.
பிரிக்கப்படும் வாக்காளர்களை, அந்த ஓட்டுச்சாவடிகளில் இணைக்க முடியுமா என ஆய்வு செய்யப்படும். இயலாத பட்சத்தில், இரு கி.மீ.,க்குள் துாரத்துக்குள்ள உள்ள மற்ற ஓட்டுச்சாவடிகளில் இணைக்க முயற்சிக்கப்படும்.
அவ்வாறும் முடியாவிட்டால், சமுதாய கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், கல்லுாரிகள் அல்லது அரசுக்கு சொந்தமான கட்டடங்களில் புதிதாக ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தப்படும்.
1,000 ஓட்டுகள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில், ஓட்டுச்சாவடிகள் அமைய இருக்கின்றன. குடியிருப்புகளில் நிரந்தரமாக வசிப்பவர்கள் இருந்தால், ஓட்டுரிமை எங்கே இருக்கிறது என விசாரித்து, வாக்காளர் பட்டியலில் ஒரே பாக எண்ணுக்குள் கொண்டு வந்து, ஓட்டுச்சாவடி ஏற்படுத்தப்படும்.
ஓட்டுச்சாவடிகளை பிரித்த பின், அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்கப்படும். ஓட்டுச்சாவடி பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும்.
கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டறிந்ததும், மாவட்ட தேர்தல் அதிகாரி மூலமாக ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததும் சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்தப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.