/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதுகாப்பற்ற கிணறுகளை மூடி வைக்க உத்தரவு
/
பாதுகாப்பற்ற கிணறுகளை மூடி வைக்க உத்தரவு
ADDED : ஆக 02, 2025 11:47 PM
மேட்டுப்பாளையம்: காரமடையில் விவசாய நிலங்களில் உள்ள பாதுகாப்பாற்ற கிணறுகளின் மேல் பகுதிகளை மூடி வைத்து பாதுகாக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை சாடிவயல் அருகே சோலை படுகை பகுதியில் காட்டு யானை ஒன்று மூன்று நாட்களுக்கு முன் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது. இந்நிலையில், காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் உள்ள பாதுகாப்பாற்ற கிணறுகளின் மேல் பகுதிகளை வனவிலங்குகளோ அல்லது மனிதர்களோ உள்ளே விழாதப்படி மூடி வைக்க வேண்டும். கிணற்றை சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.