/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கக விதை சுத்திகரிப்பு பயிற்சி
/
அங்கக விதை சுத்திகரிப்பு பயிற்சி
ADDED : செப் 19, 2024 10:19 PM
மேட்டுப்பாளையம் : காரமடை அருகே தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட காளியப்பனுர் கிராமத்தில், வேளாண்மை துறையின் அட்மா திட்டம் வாயிலாக விவசாயிகளுக்கு, அங்கக விதை சுத்திகரிப்பு மற்றும் சான்றளிப்பு முறைகள் பற்றிய பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதற்கு, காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்யலட்சுமி தலைமை வகித்தார். விவேகானந்தபுரம், வேளாண்மை அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் சகாதேவன், விவசாயிகளுக்கு, இயற்கை முறையில் விவசாயம் செய்வது எப்படி, விதை உற்பத்தி செய்வது மற்றும் இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்வது எப்படி என்பது போன்ற தொழில்நுட்பங்களை தெளிவாக எடுத்து கூறினார்.
துணை வேளாண்மை அலுவலர் நாராயணசாமி, மண் பரிசோதனை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்றும், மண் பரிசோதனை செய்து, பயிருக்கு ஏற்ற உரங்களை சரியான அளவில் இடவேண்டும் என எடுத்துக் கூறினார்.
மேலும் பயிற்சி முகாமில், கோவை மாவட்ட பட்டு வளர்ச்சி துறை ஆய்வாளர் சிவசங்கர் கலந்து கொண்டு, துறை திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார்.