/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைக்காக செயல்படும் நிறுவனம்; விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
/
குழந்தைக்காக செயல்படும் நிறுவனம்; விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
குழந்தைக்காக செயல்படும் நிறுவனம்; விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
குழந்தைக்காக செயல்படும் நிறுவனம்; விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 31, 2025 11:30 PM
கோவை; குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு முன் மாதிரி சேவை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.
இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு ''முன் மாதிரியான சேவை விருதுகள் 4,00,0000 ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது. மேற்படி முன்மாதிரியான சேவை விருதுகள் அரசின் கீழ் குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் தலா ரூ.1.00 லட்சம் என வழங்கப்படுகிறது.
முன் மாதிரியான சேவை விருது பெற, இளைஞர் நீதிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக இருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் முழுமையான செயல்பாட்டில் இருக்க வேண்டும், குழந்தை பராமரிப்பு நிறுவனத்தின் மீதோ அல்லது அந்நிறுவனத்தின் பணியாளர்கள் மீதோ எந்தவொரு உரிமையியல் மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கக் கூடாது.
தகுதியுடைய குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன் கூடிய கருத்துக்களை கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் வரும் ஆக., 7 மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கலெக்டர் கூறியுள்ளார்.