/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பத்மஸ்ரீ' பாப்பம்மாள் காலமானார்
/
'பத்மஸ்ரீ' பாப்பம்மாள் காலமானார்
ADDED : செப் 28, 2024 02:12 AM

மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கம்மாள் பாப்பம்மாள், 108. இவரது கணவர் ராமசாமி. தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில், 18 ஆண்டுகளுக்கு முன், இவரது கணவர் ராமசாமி இறந்தார். அதனால், பாப்பம்மாளின் அக்கா நஞ்சம்மாள் மகள் சாந்தாமணி வீட்டில் பாப்பம்மாள் வசித்து வந்தார்.
இயற்கை விவசாயத் தின்மீது கொண்ட ஆர்வத்தைப் பார்த்து, மத்திய அரசு, 2021ம் ஆண்டு இவருக்கு, பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
சில மாதங்களாக பாப்பம்மாள் பாட்டி உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு, 8:30 மணிக்கு இறந்தார்.
இவரது உடல் தேக்கம்பட்டியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.