/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கரூர் வரை மட்டுமே பாலக்காடு ரயில்
/
கரூர் வரை மட்டுமே பாலக்காடு ரயில்
ADDED : பிப் 15, 2025 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கரூர்- வீரராக்கியம் இடையே உள்ள ரயில் பாலத்தில், வெல்டிங் மற்றும் இதர பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
எனவே, இன்று ஒரு நாள் மட்டும், திருச்சியில் இருந்து மதியம் 1:00 மணிக்கு புறப்பட்டு, பாலக்காடு செல்லவிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 16843) வீரராக்கியம் வரை, மட்டுமே இயக்கப்படும். பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்த பின், முன்பதிவு இல்லாத ரயிலாக வீரராக்கியத்தில் இருந்து பாலக்காடு வரை இயக்கப்படும். இந்த ரயில், வழக்கமான ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.