/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேரு கல்லுாரியில் 'பேண்டாபிளஸ்' விழா
/
நேரு கல்லுாரியில் 'பேண்டாபிளஸ்' விழா
ADDED : மார் 07, 2024 04:00 AM

கோவை : திருமலையம்பாளையம், நேரு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 'பேண்டாபிளஸ்' கலை விழா நடந்தது.
நேரு கல்விக்குழும நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ், நேரு கல்விக் குழுமத்தின் செயலர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக எச்.டி.எப்.சி., வங்கி உதவி மேலாளர் பினி, சக்தி பைனான்ஸ் எச்.ஆர்., ரோஷினி, ரேடியோ ஜாக்கி சுஷ்மா, வக்கீல் அக்ஷரா கலந்து கொண்டனர்.
பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள், ஆடல், நடனம், குழுநடனம் போன்ற கலை நிகழ்வுகளை அரங்கேற்றினர். பின்னணி பாடகர்கள் நரேஷ் அய்யர், ஸ்டீபன் தேவசி இன்னிசை நிகழ்வை நடத்தினர். கலைநிகழ்வில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. நேரு கல்விக் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நாகராஜா, முதல்வர் அனிருதன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

