/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பகுதி நேர ரேஷன் கடை மூலக்கடையில் துவக்கம்
/
பகுதி நேர ரேஷன் கடை மூலக்கடையில் துவக்கம்
ADDED : டிச 12, 2024 05:43 AM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, மூலக்கடையில் உள்ள பல்நோக்கு மையம் பகுதி நேர ரேஷன் கடையாக மாற்றப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு ஒன்றியம், பொட்டையாண்டி புறம்பு ஊராட்சிக்கு உட்பட்ட, மூலக்கடை பகுதியில் கடந்த ஆறு மாதத்திற்கு முன், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன் தொகுதி நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக பல்நோக்கு மையம் கட்டப்பட்டது.
இந்தக் கட்டடம் கட்டப்பட்ட நாளிலிருந்து பகுதிநேர ரேஷன் கடையாக மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து, ரேஷன் கடை துவங்கப்பட்டது.
கடையை, கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் முருகேசன் திறந்து வைத்தார். மற்றும் பொட்டையாண்டிபுறம்பு ஊராட்சி தலைவர் ராம்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஊராட்சி தலைவர் கூறியதாவது:
மூலக்கடை பகுதியில், 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். மூலக்கடைக்கு அருகாமையில், 100கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ரேஷன் பொருட்கள் வாங்க சிங்கையன்புதூர் பகுதிக்கு வந்து செல்லும் நிலை இருந்தது.
இதில், சிலர் தங்கள் வாகனங்களில் வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். சிலர் அரசு பஸ்சை நம்பி உள்ளனர். இதனால் பல குடும்பத்தினர், ரேஷன் பொருட்கள் வாங்க சிரமப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, மூலக்கடை பகுதியில் உள்ள பல்நோக்கு மையத்தை பகுதி நேர ரேஷன் கடையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பேரில் தற்போது ரேஷன் கடை துவங்கப்பட்டுள்ளது.
இதனால், மக்கள் சிரமமின்றி குடியிருப்பு பகுதியில் அருகாமையிலேயே ரேஷன் பொருட்களை வாங்கி செல்லலாம்.
இவ்வாறு, கூறினார்.