/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் கேட்கிறார்கள் பகுதிநேர ஆசிரியர்கள்
/
தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் கேட்கிறார்கள் பகுதிநேர ஆசிரியர்கள்
தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் கேட்கிறார்கள் பகுதிநேர ஆசிரியர்கள்
தீபாவளி பண்டிகைக்கு முன்பணம் கேட்கிறார்கள் பகுதிநேர ஆசிரியர்கள்
ADDED : செப் 29, 2024 01:45 AM
கோவை: தீபாவளி பண்டிகைக்கு முன் பணம் வழங்கி, அதனை மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய ஆணையிட வேண்டும் என, பகுதிநேர அரசு பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்து.
இதுகுறித்து, கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில், 13 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு, 2021ம் ஆண்டு முதல் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த ஜனவரி முதல் 2500 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. இந்த தொகை ஊதியத்துடன் சேர்க்காமல், தனியாக வழங்கப்படுகிறது.
இதை ஏற்கனவே வழங்கும் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்துடன் இணைத்து, 12 ஆயிரத்து 500 ரூபாயாக வழங்க வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்த, ரூ.10 லட்சம் மருத்துவ காப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை. அதற்கான ஆணை பிறப்பித்து செயல்படுத்த வேண்டும்.
தீபாவளி பண்டிகைக்கு முன் பணம் வழங்கி, அதனை மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய ஆணையிட வேண்டும். பணி மாறுதல் மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும்.
பகுதிநேர ஆசிரியர் பணி நிரந்தரம் குறித்து, தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற, முதல்வர் பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.