ADDED : நவ 14, 2025 09:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்: நெகமம் அருகே, சோழனூரில் பயணியர் நிழற்கூரையை சுற்றிலும் புதர் நிறைந்து காணப்படுகிறது. நிழற்கூரையின் உள்பகுதியில் பயணியர் அமரும் இருக்கை சேதமடைந்துள்ளது.
இது மட்டும் இன்றி, வெளிப்புறத்தில் அதிக அளவில் பிளாஸ்டிக் டம்ளர்கள், மது பாட்டில்கள் குவிந்து கிடக்கிறது. இந்த நிழற்கூரை மது அருந்தும் கூடாரமாக மாறிவிட்டது.
இதனால், பயணியர் நிழற்கூரைக்குள் நிற்பதை தவிர்த்து, ரோட்டோரத்தில் நின்று பஸ்களில் பயணிக்கின்றனர். மேலும், இரவு நேரத்தில் இப்பகுதியில் மக்கள் நிற்கவே அச்சப்படுகின்றனர்.
எனவே, மக்கள் நலன் கருதி நிழற்கூரையில் சேதமடைந்த பகுதியை சீரமைத்து, சுற்றுப்புறத்தில் உள்ள செடிகளை அகற்றஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

