/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே ஸ்டேஷனில் திரண்ட பயணியர்
/
ரயில்வே ஸ்டேஷனில் திரண்ட பயணியர்
ADDED : அக் 10, 2024 11:56 PM

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் தங்கி, கல்லூரிகளில் படிக்கின்றனர். சிலர் இங்குள்ள தனியார் கம்பெனிகளில் வேலை செய்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, பஸ் பயணத்தை பயன்படுத்தி வந்தனர். தற்போது ரயில் சேவையை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நாட்களை முன்னிட்டு, கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் கோவை - மதுரை ரயிலுக்கு, 300க்கும் மேற்பட்ட பயணியர் காத்திருந்து பயணம் மேற்கொண்டனர்.
ரயில் பயணியர் கூறியதாவது: மதுரை மற்றும் திருச்சி போன்ற இடங்களுக்கு அதிக அளவு பயணியர் செல்கின்றனர். குறிப்பாக பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. ரயிலில் பயணம் செய்யும் போது, செலவு குறைகிறது. மேலும், மாலை நேரத்தில் மட்டுமே ரயில் சேவையை பயன்படுத்த முடிகிறது. இதே போன்று காலை நேரத்திலும் ரயில் சேவை இருந்தால், ஏராளமானோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு, கூறினர்.