/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐந்தாம் நாளாக 10 விமானங்கள் ரத்து கட்டணம் திரும்ப பெற்ற பயணிகள்
/
ஐந்தாம் நாளாக 10 விமானங்கள் ரத்து கட்டணம் திரும்ப பெற்ற பயணிகள்
ஐந்தாம் நாளாக 10 விமானங்கள் ரத்து கட்டணம் திரும்ப பெற்ற பயணிகள்
ஐந்தாம் நாளாக 10 விமானங்கள் ரத்து கட்டணம் திரும்ப பெற்ற பயணிகள்
ADDED : டிச 08, 2025 06:11 AM

கோவை: ஐந்தாம் நாளாக, 10 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பயணிகளுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது.
கோவையில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பல்வேறு நிறுவனங்கள் விமான சேவை வழங்கி வருகின்றன. இண்டிகோ நிறுவனம், 26 விமான சேவைகளை வழங்கி வருகிறது.
விமானப்பணி, ஊழியர்களுக்கான பணி நேரம் உள்ளிட்ட புதிய விதிகள் காரணமாக, இண்டிகோ நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்டது. இதையடுத்து இவ்விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. நிலைமை சீரடைந்து வருகிறது. இந்நிலையில் ஐந்தாம் நாளாக நேற்றும், 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 14 விமானங்கள் இயக்கப்பட்டன.
ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான கட்டணத்தை திருப்பி அளிக்க, மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. பயணக் கட்டணத்தை திரும்ப தரும் நடவடிக்கையை இண்டிகோ நிறுவனம் நேற்று மேற்கொண்டது. பயணிகள் பெற்றுக்கொண்டனர்.