/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுார் தொகுதியில் 594 பேருக்கு பட்டா
/
சூலுார் தொகுதியில் 594 பேருக்கு பட்டா
ADDED : மார் 09, 2026 06:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்: சூலுார் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில், ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அவர்களில், 594 பேருக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி, ஆர்.வி.எஸ்., கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமை வகித்தார்.
எம்.பி., கணபதி ராஜ்குமார் பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார். கோவை தெற்கு ஆர்.டி.ஓ., மாருதி பிரியா, சூலுார் தாசில்தார் செந்தில்குமார், சூலுார் பேரூராட்சி தலைவர் தேவி, ஒன்றிய செயலாளர் அன்பரசு, சிபி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

