/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் கோட்ட அளவில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
/
தபால் கோட்ட அளவில் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
ADDED : டிச 12, 2025 05:00 AM
கோவை: கோவை தபால் கோட்ட அளவிலான ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம், வரும் 30ம் தேதி நடத்தப்படுகிறது.
கோவை தபால் பிரிவின் வரும் 31ம் தேதி வரையிலான, அரையாண்டு ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம், வரும் 30ம் தேதி காலை 11:-00 மணியளவில், கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடத்தப்படுகிறது.
ஓய்வூதியம் தொடர்பான குறைகள் ஏதேனும் இருந்தால், மனுவாக கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம், கோவை 641001' என்ற முகவரிக்கு தபால் வாயிலாகவோ, docoimbatore.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.
மனுக்கள் வரும் 20ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என, கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

