/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
/
குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : பிப் 17, 2024 02:08 AM

தொண்டாமுத்தூர்:மத்வராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட தெம்பிலிபாளையத்தில், கடந்த ஒரு மாதமாக சிறுவாணி குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனக்கூறி, 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இரவில் சிறுவாணி மெயின் ரோட்டில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலாந்துறை (பொ) இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது, 'ஒரு மாதமாக எங்கள் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. சில குறிப்பிட்ட நபர்கள் உள்ள பகுதிக்கு மட்டும் குடிநீர் விநியோகிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள வாட்டர் மேன், முறையாக வேலை செய்வதில்லை. உடனடியாக, இப்பகுதிக்கு வேறு நபரை பணி அமர்த்த வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தினர்.
ஊராட்சி நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக குடிநீர் விநியோகிக்கப்படும் என, போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், சிறுவாணி மெயின் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.