/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்டில் எரிக்கப்படும் குப்பை சுகாதாரம் பாதிப்பதாக மக்கள் புகார்
/
பஸ் ஸ்டாண்டில் எரிக்கப்படும் குப்பை சுகாதாரம் பாதிப்பதாக மக்கள் புகார்
பஸ் ஸ்டாண்டில் எரிக்கப்படும் குப்பை சுகாதாரம் பாதிப்பதாக மக்கள் புகார்
பஸ் ஸ்டாண்டில் எரிக்கப்படும் குப்பை சுகாதாரம் பாதிப்பதாக மக்கள் புகார்
ADDED : பிப் 20, 2024 05:00 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி பழைய பஸ் ஸ்டாண்டில், குப்பையை எரிப்பதால், சுவாசக்கோளாறு போன்ற பிரச்னைகளால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
பொள்ளாச்சி நகராட்சி பழைய பஸ் ஸ்டாண்டில், திருப்பூர், கோவை, உடுமலை, பழநி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் அதிகளவு செல்கின்றன. தினமும், ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் ஒரு பகுதியில், குப்பை அதிகளவு குவிக்கப்பட்டு தேங்கிக்கிடக்கின்றன. இதனால், சுகாதாரச்சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், குப்பைக்கு அவ்வப்போது தீ வைப்பதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி நகராட்சி பழைய பஸ் ஸ்டாண்டில், குப்பை முறையாக அகற்றப்படாமல் தேங்கிக்கிடக்கின்றன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச்சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
மேலும், அவ்வப்போது, தேங்கிக்கிடக்கும் குப்பை தீ வைத்து எரிக்கப்படுவதால், அப்பகுதியே புகை மூட்டமாக காணப்படுகிறது. இவ்வழியாக செல்வோர், மூக்கை மூடியபடி ஓட்டம் பிடிக்கின்றனர்.
மேலும், சுவாசக்கோளாறு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதால், பயணியர் மிகுந்த சிரமப்படுகின்றனர். இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை.
பல மாவட்டங்களில் இருந்து, பயணியர் வந்து செல்லும் முக்கிய இடமாக உள்ள பஸ் ஸ்டாண்டில், துாய்மைப்பணிகளை மேற்கொள்ள, நகராட்சி நிர்வாகம் அக்கறை காட்ட வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

