/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெரு நாய்களை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை
/
தெரு நாய்களை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை
ADDED : செப் 11, 2025 10:13 PM
அன்னுார்; அன்னுார், கோவை சாலையில், தெலுங்கு பாளையத்தில், துவக்கப்பள்ளி, ரேஷன் கடை மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. அதிக அளவில் வீடுகள் உள்ளன. இங்கு தெரு நாய்கள் அதிகரித்துவிட்டன.
இதுகுறித்து தெலுங்குபாளையம் மக்கள் கூறுகையில், '20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் வீதி வீதியாக பொதுமக்களை துரத்துகின்றன. குறிப்பாக குழந்தைகள், பெண்கள், முதியோரை துரத்தி கடிக்கின்றன. இவற்றால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். இது குறித்து கரியாம்பாளையம் ஊராட்சி அலுவலகத்திலும், அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கோவை கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டத்தில் மனுதரப்பட்டுள்ளது.
அதிகாரிகள் விரைவில் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்,' என்றனர்.