/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோரத்தில் கேட்பாரற்ற மின் கம்பங்கள் அப்புறப்படுத்த மக்கள் கோரிக்கை
/
ரோட்டோரத்தில் கேட்பாரற்ற மின் கம்பங்கள் அப்புறப்படுத்த மக்கள் கோரிக்கை
ரோட்டோரத்தில் கேட்பாரற்ற மின் கம்பங்கள் அப்புறப்படுத்த மக்கள் கோரிக்கை
ரோட்டோரத்தில் கேட்பாரற்ற மின் கம்பங்கள் அப்புறப்படுத்த மக்கள் கோரிக்கை
ADDED : டிச 25, 2025 06:05 AM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில், ரோட்டோரங்களில் கிடக்கும் மின்கம்பங்களை அகற்ற வேண்டுமென மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் பழைய மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் ரோட்டோரம் குப்பை போன்று கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை மின்வாரியத்தினர் முறையாக அகற்றம் செய்யாமல் உள்ளனர்.
ரோட்டோரத்தில் குப்பை கொட்டுதல், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. இதில், செட்டியக்காபாளையம் கிராமத்தில், நீர் தேக்க பகுதி அருகே ரோட்டோரம் பழைய மின் கம்பங்கள் மாதக்கணக்காக கிடக்கிறது. இப்பகுதியில் ஊராட்சி நிர்வாகத்தினர் தூய்மை பணி மேற்கொள்ளவும் சிரமப்படுகின்றனர்.
நெகமத்தில் இருந்து கோவில்பாளையம் செல்லும் ரோட்டில் வகுத்தம்பாளையம் பகுதியில் இரண்டாக உடைந்த நிலையில் மின்கம்பம் ரோட்டோரம் போடப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதே போன்று, கிணத்துக்கடவிலிருந்து கொண்டம்பட்டி செல்லும் ரோட்டில் தனியார் லே-அவுட் அருகே, அதிகளவில் பழைய மற்றும் சேதமடைந்த மின் கம்பங்கள் போடப்பட்டுள்ளது.
மின்வாரியம் சார்பில் புதிய மின்கம்பங்கள் நடும் போது, பழைய மின்கம்பங்களை முறையாக அகற்றாமல் அங்கேயே போடப்படுகிறது. அது அப்படியே வருடக்கணக்கில் இருக்கிறது.
சில இடங்களில் இது போன்று கிடக்கும் இரும்பு மின் கம்ப கம்பிகளை, அடையாளம் தெரியாத நபர்கள், தனியாக கழட்டி எடுத்துச் செல்கின்றனர்.
எனவே, கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின்வாரியத்தினர் ஆய்வு மேற்கொண்டு, ரோட்டோரத்தில் இருக்கும் கேட்பாரற்ற பழைய மின்கம்பங்களை எடுத்துச் செல்ல வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

