/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காணும் பொங்கல் விடுமுறை கொண்டாட உக்கடம் குளக்கரையில் திரண்ட மக்கள்
/
காணும் பொங்கல் விடுமுறை கொண்டாட உக்கடம் குளக்கரையில் திரண்ட மக்கள்
காணும் பொங்கல் விடுமுறை கொண்டாட உக்கடம் குளக்கரையில் திரண்ட மக்கள்
காணும் பொங்கல் விடுமுறை கொண்டாட உக்கடம் குளக்கரையில் திரண்ட மக்கள்
ADDED : ஜன 16, 2025 11:56 PM

கோவை; காணும் பொங்கல் விடுமுறையை, கோவை மக்கள், உக்கடம் பெரிய குளக்கரையிலும், பூங்காக்களிலும் குடும்பத்தோடு கழித்தனர்.
தைப்பொங்கல் திருநாளை, 14ம் தேதி வீட்டில் பொங்கல் வைத்து, சூரியனுக்கு படைத்து வழிபட்ட கோவை மக்கள், நேற்று முன்தினம் மாட்டுப்பொங்கலை கோலாகலமாக கொண்டாடி, மகிழ்ந்தனர். நேற்றைய தினம் காணும் பொங்கல்.
குடும்பத்தோடு ஜாலியாக பொழுதை கழிக்கும் வகையில் வ.உ.சி., பூங்காவுக்கு வந்திருந்தனர். உயிரியல் பூங்கா மூடப்பட்டிருப்பதால், அருகிலுள்ள தாவரவியல் பூங்காவுக்குள் ஒரு 'ரவுண்டு' சுற்றி வந்தனர். பின், சிறுவர்கள் பூங்காவுக்கு சென்று, சறுக்கு விளையாட்டுகளில் குழந்தைகள் சறுக்கி விளையாடினர்; ஊஞ்சலாடி மகிழ்ந்தனர்.
இதேபோல், உக்கடம் பெரிய குளக்கரைக்கு ஏராளமானோர் குடும்பத்தோடு வந்திருந்தனர். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து குளத்தின் அழகை ரசித்தவாறு குடும்பத்தினர் குளத்தின் கடைசி பகுதி வரை சென்று வந்தனர்.
ஆங்காங்கே உள்ள விளையாட்டுகளில் குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். பலரும் படகு சவாரி சென்றனர்.
'ஜிப்லைன்' சைக்கிள், 'ஜிப்லைன்' கயிற்றில் பயணித்து, மகிழ்ந்தனர்.சாலையோர தள்ளுவண்டி கடைகளில் பானி பூரி, பேல் பூரி, ஐஸ்கிரீம், வெள்ளரி, மசாலா பொரி, தர்பூசணி, அன்னாசிப்பழ விற்பனை ஜோராக நடந்தது.