/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூடிய ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் திறக்கணும்! நல்லட்டிபாளையத்தில் மக்கள் வேண்டுகோள்
/
மூடிய ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் திறக்கணும்! நல்லட்டிபாளையத்தில் மக்கள் வேண்டுகோள்
மூடிய ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் திறக்கணும்! நல்லட்டிபாளையத்தில் மக்கள் வேண்டுகோள்
மூடிய ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் திறக்கணும்! நல்லட்டிபாளையத்தில் மக்கள் வேண்டுகோள்
ADDED : ஜூலை 17, 2025 09:33 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அருகே, நல்லட்டிபாளையத்தில் மூடப்பட்ட ரயில்வே ஸ்டேஷனை மீண்டும் திறக்க வேண்டுமென, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் பகுதியில் கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன் ரயில்வே ஸ்டேஷன் செயல்பட்டது. பொதுமக்கள் குடியிருப்பு பகுதி அருகே, ரயில்வே ஸ்டேஷன் இருந்ததால் தினமும், 100க்கும் மேற்பட்ட மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வந்தனர்.
இப்போது உள்ளது போன்று பஸ் போக்குவரத்து இல்லாத நிலையில், விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில், 500க்கும் மேற்பட்ட பயணியர் ரயிலில் பயணித்து வந்தனர்.
அப்போது, நல்லட்டிபாளையம் வழியாக பொள்ளாச்சி - கோவை, திண்டுக்கல் --- கோவை உள்ளிட்ட பயணியர் ரயில்கள் இயங்கி வந்தன. மேலும், 'ஹால்ட் ஸ்டேஷன்' ஆகவும் இருந்தது. இதனால், 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்தனர்.
ஆனால், 1990ல் இந்த ரயில்வே ஸ்டேஷன் மூடப்பட்டது. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போதைய சூழ்நிலையில், நல்லட்டிபாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகரித்து வருவதுடன், மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி ரயில்வே ஸ்டேஷன் மீண்டும் அமைத்து, ரயில்கள் நிறுத்தி இயக்க வேண்டும்.
மக்கள் கூறியதாவது:
1980ம் ஆண்டு இப்பகுதியில் அதிகமாக தண்ணீர் பஞ்சம் இருந்தது. இதை சரி செய்ய ரயில் சேவையை பயன்படுத்தி, கோவையில் இருந்து சிறுவாணி நீர் ரயில் வாயிலாக இங்கு கொண்டு வந்து வழங்கப்பட்டது.
இதுமட்டுமின்றி, கல்வி மற்றும் வியாபார நோக்கத்துக்காக பலர் ரயில் சேவையை பயன்படுத்தினர். ஆனால், 1990ல் ஸ்டேஷன் மூடப்பட்டு ரயில் சேவை கைவிடப்பட்டது.
நல்லட்டிப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் மீண்டும் துவங்க வேண்டும். ரயில்களை நிறுத்தி இயக்க வேண்டும். இதை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த, 2021 அக்., மாதம் நடந்த கிராம சபை கூட்டத்தில், ரயில்வே ஸ்டேஷன் மீண்டும் கொண்டு வர வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது, அதிகப்படியான மக்கள் பஸ் போக்குவரத்தை நம்பியே உள்ளோம். இதனால் தினமும் நெரிசல் பயணம் செய்யும் நிலை உள்ளது. இங்கு, மீண்டும் ரயில்வே ஸ்டேஷன் அமைக்கப்பட்டால், அரசுக்கு வருமானம் அதிகரிப்பதோடு, மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு, கூறினர்.