sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'வேற்று மதத்தை சேர்ந்தவர்களும் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்'

/

'வேற்று மதத்தை சேர்ந்தவர்களும் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்'

'வேற்று மதத்தை சேர்ந்தவர்களும் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்'

'வேற்று மதத்தை சேர்ந்தவர்களும் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர்'


ADDED : ஜன 29, 2024 12:54 AM

Google News

ADDED : ஜன 29, 2024 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:''அயோத்தியில் வேற்று மதத்தை சேர்ந்தவர்களும், தங்களது வீடுகளில்மாலை நேரம்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். நாமசங்கீர்த்தனத்தில் பங்கேற்று, மெய்மறந்து நடனமாடினர்,'' என்று பேரூர் அசன சன்மார்க்க சாதுமடத்தை சேர்ந்த, ஆத்மானந்தபுரி சுவாமிகள் கூறினார்.

அயோத்தி ராமர் கோவில் பிராணபிரதிஷ்டை வைபவத்தில் பங்கேற்ற அவர், நமது நாளிதழுக்கு அளித்த பேட்டி:

அயோத்தி ராமர் பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்றது, பேரானந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதிலுமிருந்து சாதுக்கள், ஆதினங்கள், மடாதிபதிகள்ராமர் கோவிலுக்குள் நுழையும் போது 'ஜெய்ஸ்ரீராம்' எனகோஷமிட்டு, பூக்களை துாவி தலைவணங்கி வரவேற்றது, அம்மாநில அரசே எங்களை அழைத்துச் சென்றது போல் இருந்தது.

ஸ்ரீ ராமபிரானை கோவிலில் தரிசித்து திரும்பும் போது, எங்களுக்கு பூக்களை துாவி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து விடைபெறச்செய்தனர்.

அயோத்தியில் எந்த திசையில் திரும்பினாலும், ஜெய்ஸ்ரீராம் கோஷம் முழங்கியது. அந்த அளவு அந்த மக்கள் மத்தியில், பக்திப்பிரவாகம் ஊற்றாக வெளிப்பட்டது.

வேற்று மதத்தை சேர்ந்தவர்களும், தங்களது வீடுகளில்மாலை நேரம்தீபம் ஏற்றி, சிறப்பு வழிபாடு செய்தனர். நாமசங்கீர்த்தனத்தில் பங்கேற்று, மெய்மறந்து நடனமாடினர். வழிநெடுக அன்னதானம் வழங்கினர்.

உ.பி.,மக்களின், 500 ஆண்டு கால போராட்டம் நிறைவு பெற்று, மக்கள் பேரானந்தக்கூத்தாடியதை நாங்கள் நேரில் காண வாய்ப்பு கிடைத்தது.

ஒவ்வொரு மாநில அரசும், அந்தந்த மாநிலத்தில் இருக்கும், அந்தந்த மதத்தை சேர்ந்தவர்களின் உரிமையை மீட்டு, நிலை நாட்ட வேண்டும்.

அதற்கு, அம்மாநில அரசு துணை நிற்க வேண்டும். அப்போது ஏகோபித்த மக்களின் ஆதரவை எளிதாக பெறமுடியும்.

நாடு முழுக்க உள்ள சாதுக்கள், மடாதிபதிகளை அழைத்து நல்ல முறையில் தங்கவைத்து, உபசரித்து பிராணபிரதிஷ்டை விழாவில் பங்கேற்க செய்தது, மிகப்பெரிய விஷயம். அவர்களது ஆன்மிக சேவையை மனதார பாராட்டுகிறோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us